தமிழ்நாட்டின் மிக விலையுயர்ந்த சிலை குமரி முனையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைதான். கடல் நடுவே நீர்மட்டத்தில் இருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது, 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 1, 2000-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இதை வடிவமைக்க ரூ.6 கோடி ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது. இந்த சிலையின் மொத்த எடை 2500 டன் ஆகும்.