லட்சத்தீவில் உள்ள அகத்தி தீவில் கட்டப்பட்டுள்ள ஏரோட்ரோம் விமான நிலையம் உலகின் ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இதன் ஓடுபாதையின் நீளம் 4,000 அடி மட்டுமே. இதைச் சுற்றிலும் கடல் அமைந்துள்ளது. விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்குவது என்பது விமானிக்கு ஓர் அக்னி பரீட்சையைப் போன்றது. சிறிய தவறு நேர்ந்தாலும் அருகில் உள்ள கடலில் விமானம் மூழ்குவது உறுதி.