சத்தியமங்கலம் சரணாலயம் தமிழ்நாட்டின் மிகப் பெரிய வனவிலங்கு சரணாலயம் ஆகும். இது புலிகள் காப்பகமாக விளங்கி வருகிறது. சுமார் 1411.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 60 புலிகள், 111 சிறுத்தைகள், 800 யானைகள் என பல விலங்குகள் உள்ளன. தென்னிந்தியாவிலேயே பெங்கால் புலிகள் அதிகமாக இருக்கும் ஒரு சரணாலயமாக இது விளங்கி வருகிறது. இங்கு பூச்சிக்கொல்லி இல்லாத வேளாண் சூழலியல் அணுகுமுறைகள் ஊக்குவிக்கப்படுகிறது.