கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தை ஆகிய நிலையில் குடும்பத்தின் நிலை தொடர்ந்தாலும் அவர்களின் உறவு-சமூக நிலைகேற்ப அவை கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம், நடுநிலை குடும்பம் என வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது, கணவன்-மனைவி, தனது குழந்தையுடன் வசிப்பது தனிக்குடும்பம் ஆகும். நடுநிலை குடும்பம் கணவன்-மனைவி, குழந்தைகள், குடும்பத்தலைவர்/தலைவியின் பெற்றோருடன் வசிப்பது ஆகும். அதேநேரத்தில், பரந்த / கூட்டுக்குடும்பம் பலதரப்பட்ட உறவுகளுடன் இணைந்து இணக்கமாக ஒரே வீட்டில் வாழ்வது ஆகும்.