அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவரின் மீது 12 குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு, அவை அனைத்தும் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை அல்லது சாகும் வரை ஆயுள் (அ) சிறையிலேயே ஜாமின் இன்றி ஆயுள் தண்டனை ஆகிய தீர்ப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நதியா பீரித்தா உறுதி செய்தார்.