மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ளது தொட்டபெட்டா மலைச்சிகரம். இது தமிழ்நாட்டின் மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இதன் உச்சியில் இருந்து மைசூர் சாமுண்டி மலையை நம்மால் பார்க்க முடியும். தொட்ட என்றால் கன்னடத்தில் பெரிய என்றும், பட்டா என்றால் மலை என்றும் பொருள் எனவே. பெரிய மலை எனும் பொருள்படி இது தொட்டபெட்டா என்று அழைக்கப்படுகிறது.