நாம் ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும், எண்டோர்பின் என்ற ஹார்மோன் உடலில் சுரக்கிறது. இது மன அழுத்தத்தை குறைக்கும் சக்தி கொண்டது. இந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும் போது மனம் லேசாகி நல்ல உணர்வு எழுகிறது. இந்த ஹார்மோன் சுரப்பால் மூளையும் சுறுசுறுப்பு அடைகிறது. இதனால் ஞாபகசக்தி, நினைவாற்றல், படைப்பாற்றல் அதிகமாகிறது. அதிகம் சிரிப்பதால் நுரையீரல் விரிவடைந்து, பிராண ஓட்டம் சீராகிறது. மனம் விட்டு சிரித்தால் தூக்கமின்மை பிரச்சினையால் தவிப்பர்கள் கூட நிம்மதியாக தூங்கலாம்.