உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் பன்னீர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் பன்னீரை அதிகமாக சாப்பிடும் போது இதய பிரச்சனையை ஏற்படுத்தும். நீங்கள் உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்கள் என்றால் பன்னீர் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். ஏனென்றால் பன்னீர் உடல் எடையை அதிகப்படுத்தும். பன்னீர் சாப்பிடுவது சில நபர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். இதனால் ஒரு சிலருக்கு அலர்ஜி, அரிப்பு, தோல் சிவந்த நிறமாக காணப்படுதல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.