'இந்தியாவில் சிறுத்தைகளின் நிலை-2022' என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874 இருந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 12,852 ஆக இருந்தது. இவற்றில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 3,907 சிறுத்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா (1,985), கர்நாடகா (1,879) அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 486 சிறுத்தைகள் அதிகரித்துள்ளன.