சோழர் காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கியது பூம்புகார். கடல் கடந்த வணிகத்தில் பிரசித்தி பெற்ற இந்த நகரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கி விட்டது. இதற்கான காரணம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலில் ஒலிசார் முறையில் நடத்தப்பட்ட ஆய்வில் பல விதமான கட்டிடங்கள், கலங்கரை விளக்கம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பூம்புகார் கடல் அரிப்பினால் அழிந்ததா? அல்லது ஆழிப்பேரலை தாக்கியதா? என்பது புரியாத புதிதாகவே உள்ளது.