அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவர பயன்படுத்தப்பட்ட ஒரு வேதிப்பொருள் தான் ‘போஸ் செக்’. அதிகமான தீ பரவுதலை தடுப்பதற்கு பல ஆண்டுகளாக இது பயன்பாட்டில் உள்ளது. கடந்த 1963-ல் யு.எஸ்.டி.ஏ எனப்படும் அமெரிக்க காடுகள் பணியகத்திடம் இருந்து இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் இதனை விமானத்தில் இருந்து தீப்பிடித்த இடங்களில் தூவுவதன் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வரலாம்.