தைவானை பூர்வீகமாக கொண்ட ஆண் கரப்பான் பூச்சிகளைக் கொண்டு ஜப்பானில் பீர் தயாரிக்கப்படுகிறது. இந்த கரப்பான் பூச்சிகளை தண்ணீரில் ஊற வைத்து, கொதிக்க வைத்து அதன் சாறிலிருந்து பீர் உருவாக்கப்படுகிறது. தைவானிய ஆண் கரப்பான் பூச்சிகள் மிகவும் சுவையாகக் கருதப்படுகிறது. இவை இறால்களுக்கு நிகரானது என்றும், இதை சாப்பிட்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும், நீண்ட காலம் வாழலாம் என ஜப்பானியர்கள் நம்புகின்றனர். இந்த பீருக்கு ஜப்பானில் கிராக்கி அதிகம்.