அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான "புஷ்பா 2" படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், 6 நாட்களில் ரூ.1002 கோடி வசூலை கடந்தது. இந்திய அளவில் அதிவேகமாக இந்த சாதனையை எட்டியுள்ள படம் என்ற பெருமையும் புஷ்பா 2 படத்திற்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், கடந்த 10-நாட்களில் உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸில் ரூ.1190 வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் வசூல் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.