BCCI நடப்பாண்டு IPL சீசனில் 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடருக்கு ஒளிபரப்பு கட்டணமாக 9,678 கோடி ரூபாயை வயாகாம் 18 நிறுவனத்தின் மூலமாக BCCI பெற்றுக் கொண்டது. டைட்டில் ஸ்பான்சர்ஷிப் வருவாய் மூலம் 500 கோடி ரூபாயை பெற்றுள்ளது. டைட்டில் ஸ்பான்சர்சிப்-காக 500 கோடி ரூபாயை டாடா நிறுவனம் அளித்துள்ளது. இதுதவிர பல முக்கிய ஸ்பான்சர்ஷிப் மூலமாகவும் BCCI-க்கு வருமானம் கிடைத்துள்ளது.