பொதுவாக நாம் ஆப்பிள்களை சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் பார்க்கிறோம். ஆனால், கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? . இது உண்மைதான் ஆனால் ஒரு ஆப்பிள் பழத்தின் விலை ரூ.500 வரை இருக்கும். இந்த பழம் சீனா மற்றும் திபெத்தில் உள்ள நைங்கி மலையின் சரிவுகளில் மட்டுமே வளரும். இது 'பிளாக் டயமண்ட் ஆப்பிள்' என்றும் அழைக்கப்படுகிறது. அதிக விலை காரணமாக, இந்த பழம் சீனாவில் உயர்தர சில்லறை விற்பனையாளர்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது.