எபிக்பில்லம் ஆக்ஸிபெட்டலம் (Epiphyllum oxypetalum) என்ற மலர் இரவில் மட்டுமே பூக்கும். இதன் காரணமாக 'இரவின் ராணி' என்று அழைக்கப்படுகிறது. இரவில் பூக்கும் இந்தப் பூ விடியும் முன்னரே வாடிவிடுகிறது. அதாவது, இம்மலரின் வாழ்வு ஒரே நாள் மட்டுமே. கள்ளி வகைச் செடியிலிருந்து மலரும் இந்த மலர் 'இரவின் இளவரசி' என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகையான மலர்கள் பண்ணை வீடுகளில் குளிர்ந்த பகுதியில் வளரும் தன்மை கொண்டவை.