மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை துவரை பயறில் அதிகமாக இருக்கின்றன. புரதம், மாவுச்சத்து, கலோரி, இரும்பு, கோலின், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. இதை அதிகம் வேக வைக்கவேண்டியது இல்லை. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடலுக்கு நல்ல சக்தியை கொடுக்கும். சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் குறைந்த அளவு சேர்த்துக் கொள்வது சிறந்தது.