குத்துச்சண்டை, சதுரங்கம் இரண்டும் ஒரே போட்டியாக நடத்தப்படும். முதல் சுற்றில் ஆக்ரோஷமாக சண்டையிடும் போட்டியாளர்கள், அடுத்த சுற்றில் ஆசுவாசமாக அமர்ந்து சதுரங்கம் விளையாடுவார்கள். போட்டியாளர்களின் மனதை ஒருங்கிணைக்கும் விதமாகவும், ஒழுக்கத்தை பின்பற்றும் வகையிலும் இரு போட்டிகளையும் ஒன்றிணைத்து நடத்துகிறார்கள். இந்த விளையாட்டு இந்தியா, பிரித்தானியா, பின்லாந்து, பிரான்ஸில் பிரபலமாக உள்ளது.