கோவைக்கு இன்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினார்கள். ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிசாமி குறித்து ஒருமையில் பேசியது குறித்த கேள்விக்கு "நான் அவசரமாக பொள்ளாச்சி செல்கிறேன். பிறகு பேசுகிறேன்" என பதிலளித்தார். உங்களுக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்கும் எதிர்பார்க்கப்பட்டு கிடைக்கவில்லையே என்ற கேள்விக்கு ஜெயக்குமார் பதில் சொல்லவில்லை.