ரேஷன் அட்டைதாரர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் eKYC அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி ரத்தானால், இலவச, மானிய விலையில் பெறும் பொருட்களை வாங்க முடியாது. உங்கள் மொபைலில் Mera Ration (அ) Aadhaar Face RD செயலியைப் பதிவிறக்கம் செய்து, ஆன்லைனிலேயே eKYC அப்டேட் செய்யலாம். அப்டேட் செய்யாதவர்கள் உடனே முந்துங்கள்.