காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு செல்ல வேண்டாம்

77பார்த்தது
காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு செல்ல வேண்டாம்
தமிழ்நாட்டில் டெங்கு, கொரோனா, இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவல் இருப்பதால், பள்ளி மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த மாணவர்களுக்கு எளிதில் காய்ச்சல் தொற்று ஏற்படும். ஒரு மாணவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், மற்றவர்களுக்கும் எளிதில் பரவும். எனவே, மாணவர்கள் காய்ச்சலில் பாதிக்கப்பட்டால், அவர்களை வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி