சுகாதாரமற்ற நீர்நிலைகள், நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்த்தால் மூளை காய்ச்சலிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாசடைந்த நீர்நிலைகளில் இருக்கும் அமீபா போன்ற நுண்ணுயிரிகள் மூக்கு வழியாக மூளையை அடைந்து, மூளைக் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. எனவே முறையாக பராமரிக்கப்படும் அல்லது குளோரினேற்றம் செய்யப்படும் நீச்சல் குளங்களில் மட்டுமே குழந்தைகளை குளிக்க அனுமதிக்க வேண்டும்.