குளிர்காலத்தில் தவிர்க்க முடியாத பொருளாக ஃபிளாஸ்குகள் உள்ளது. சூடான திரவத்தை ஊற்றி வைப்பதால் ஃபிளாஸ்குகளில் ஒரு வித துர்நாற்றம் உண்டாகிறது. இந்த துர்நாற்றத்தைப் போக்க ஒரு எளிய தீர்வு உள்ளது. ஃபிளாஸ்கில் சூடான தண்ணீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, அரை மூடி எலுமிச்சை சாறு, பாத்திரம் தேய்க்கும் ஜெல் சிறிது சேர்த்து நன்றாக குலுக்கி 20 நிமிடங்கள் ஊற வைத்துவிட வேண்டும். பின்னர் எடுத்து கழுவுங்கள். அழுக்குகளுடன், அந்த வாடையும் வெளியேறிவிடும்.