கட்சிக்கு ரூ.1.06 கோடி நிதி திரட்டி வழங்கிய திமுக மகளிரணி

82பார்த்தது
கட்சிக்கு ரூ.1.06 கோடி நிதி திரட்டி வழங்கிய திமுக மகளிரணி
மதுரையில், உத்தங்குடி கலைஞர் திடலில் திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று (ஜூன் 1) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்­பொ­துக்­கு­ழு­வில் 27 சிறப்­பு­மிக்க தீர்­மா­னங்­கள் நிறைவேற்­றப்பட்­டன. இந்த பொதுக்குழு கூட்டத்தில், திமுக மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை முயற்சியின் மூலம் கட்சிக்காக நிதி திரட்டப்பட்டது. இதில் 1 கோடி 6 லட்சம் ரூபாய் திரட்டி, அந்த நிதி பொதுக்கூட்டத்தில் கட்சிக்கு வழங்கப்பட்டது. திமுக இளைஞரணி வழங்கிய நிதியைவிட மகளிரணி வழங்கிய நிதி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி