திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்துகளை, அழித்த திமுக நிர்வாகிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து இன்று (ஜூன் 9) நடந்த விசாரணையில், திமுக மாநில நிர்வாகி உள்ளிட்ட ஏழு பேருக்கு ஒருமாத சிறை அல்லது அபராதம் செலுத்த நெல்லை மாவட்ட நான்காவது முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், 7 பேரும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்டனர்.