சீமானிடம் பிரச்சினை செய்ய திமுக தயாராக இல்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் சீமான் தேர்தலில் பிரச்சாரம் செய்வது அவரது உரிமை. குறுக்கே நிற்கவோ, பிரச்சனை செய்யவோ திமுக தயாராக இல்லை. நாங்கள் கொண்டு வந்துள்ள திட்டங்களுக்கு மக்களிடம் என்ன வரவேற்பு இருக்கிறது என்பதே முக்கியம். நிதிநிலைமையை மோசமாக வைத்துவிட்டு அதிமுக ஆட்சியாளர்கள் போயுள்ளார்கள்' என்றார்.