முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக எம்பி கனிமொழிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். திமுக மகளிர் அணி நடத்திய வினாடி வினா இறுதிப் போட்டி விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பாசத்தை பொழியும்போது கனிமொழியாகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி நாடாளுமன்றத்தில் பேசும்போது கர்ஜனை மொழியாகவும் இருக்கிறார். இந்திய நாடாளுமன்றத்தில் வீரமங்கையாக செயல்பட்டு வருபவர்தான் என் தங்கை கனிமொழி0” என்று பாராட்டியுள்ளார்.