அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “4 ஆண்டு கால ஆட்சியில் 80% வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை'. தேர்தல் பிரச்சாரத்தின் போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள். இப்போது அது என்ன ஆனது?'. `மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் கையை விரித்து விட்டார். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது'' என்றார்.