மதுரை உத்தங்குடியில் இன்று (ஜூன் 1) திமுகவின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் காலை முதலே திரளாக வந்துகொண்டிருக்கின்றனர். பொதுக்குழுவில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு முன்னதாகவே அழைப்பாணை கொடுக்கப்பட்டுள்ளது. அதனை எடுத்துவருவோருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தவறுதலாக அழைப்பாணை மறந்துவிட்டு வந்தவர்கள் தங்களின் உறுப்பினர் அடையாள அட்டையை காண்பித்து மேற்படி அனுமதிக்கப்படுகின்றனர்.