திமுக பொதுக்குழு: பாஜகவை கண்டித்து தீர்மானம்

85பார்த்தது
திமுக பொதுக்குழு: பாஜகவை கண்டித்து தீர்மானம்
மதுரை: கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பாஜக அரசுக்குக் கண்டனம், ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதற்கு கண்டனம், விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக பொதுக்குழு மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் இந்தப் பொதுக்குழு, திமுகவுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி