மதுரையில் இன்று (ஜூன் 1) திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. 48 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் திமுகவினர் பங்கேற்க உள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் திமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.