மதுரை திமுக பொதுக்குழுவில் மறைந்த திமுக, திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உட்பட பலருக்கு முதலில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, மறைந்த முன்னாள் பிரதமர் & காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பஹல்காம் தாக்குதலில் மரணம் அடைந்த இந்தியர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.