மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள, சுற்றுலா மாளிகையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்ட நிலையில் புதூர், மூன்றுமாவடி, மாட்டுத்தாவணி, உத்தங்குடி பகுதியில் சாலைப்பேரணியாகவும் சென்றார். இந்நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் கலைஞர் திடலுக்கு முதல்வர் சற்று முன்னர் வருகை தந்தார். சிறிது நேரத்தில் திமுகவின் கொடி ஏற்றப்பட்டு பொதுக்குழு கூட்டம் தொடங்குகிறது.