மதுரை உத்தங்குடியில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 1) நடைபெற்றது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் நடக்கும் இந்த கூட்டத்தில் 3400 பொதுக்குழு உறுப்பினர்கள், 23 அணிகளின் நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், 76 மாவட்டச் செயலாளர்கள் என 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 3500 பேர் இருந்து சாப்பிடும் அளவிற்கு பந்தல் அமைக்கப்பட்டு மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா மட்டன் கோலா உட்பட 48 வகையான சைவ-அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.