கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் - திமுகவுக்கு நெருக்கடி

52பார்த்தது
கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் - திமுகவுக்கு நெருக்கடி
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். மேலும் அவர், "கூட்டணி கட்சிகளை மதிப்பதில் திமுகவை எந்த குறையும் சொல்ல முடியாது. கடந்த 2021 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற கொள்கையின் படி குறைந்த தொகுதிகளில் சிபிஎம் போட்டியிட்டது. அதே நடைமுறை எதிர்வரும் தேர்தலிலும் தொடரக்கூடாது. 2026 தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி