தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்க மாநில பொதுக்குழு கூட்டம், நேற்று கோவையில் நடந்த நிலையில்
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், தமிழகம் - புதுவையில் 40 தொகுதியிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நன்றி செலுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.