அதிமுக கூட்டணியில் தேமுதிக? சூசக பதில்

83பார்த்தது
அதிமுக கூட்டணியில் தேமுதிக? சூசக பதில்
தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 11) அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதாவிடம் அதிமுக கூட்டணி குறித்து கே.பி. முனுசாமி தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரேமலதா, "அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பதாக கூறிய கே.பி. முனுசாமியிடம் தான் பதில் கேட்க வேண்டும். அவர் கூறும் விஷயத்துக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது" என பேசினார்.

தொடர்புடைய செய்தி