கள்ளக்குறிச்சியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடிக்கு மேல் பண மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த சூர்யமகாலட்சுமி, சிவக்குமார் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பாஜகவைச் சேர்ந்த சூர்யமகாலட்சுமி முன்னாள் நகர்மன்ற தலைவராகவும், சிவக்குமார் மாவட்ட பாஜக தரவு தள மேலாண்மை முன்னாள் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளனர்.