கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக்குமார் (30) என்பவர் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். அதில் நஷ்டம் அடைந்ததாக தெரிகிறது. இதனால், தீபாவளி சீட்டு கட்டியவர்கள் பணம் கேட்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு எற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் நடந்த தகராறில் மனம் உடைந்த மனைவி உஷா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உஷா கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.