நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களை கீழே இறக்க கூடாது என்றும் அங்கேயே வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நேற்று (ஜுலை 27) மாஞ்சோலை சென்று தொழிலாளர்களுக்கு மீதமுள்ள 75 சதவீத பணபலன் தொகை வழங்குவதற்கான விண்ணப்ப படிவத்தினை வழங்கினர். மேலும் அந்த தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.