மாரடைப்பால் உயிரிழந்த விக்ரம் சுகுமாரன் 'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் நடிகர் சாந்தனுவை வைத்து 'ராவண கோட்டம்' என்ற படத்தை இயக்கினார். அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சாந்தனு, "விக்ரம் சுகுமாரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன், உங்களுடன் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் எப்போதும் நினைவில் கொள்வேன். உங்களை மிகவும் மிஸ் செய்வேன்" என்றார்.