’இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தரின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச. 23) அனுசரிக்கப்படுகிறது. சினிமாவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய பாலசந்தர் நூறுக்கும் அதிகமான படங்களை இயக்கியுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் எனும் மாபெரும் நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். சுஜாதா, பிரகாஷ்ராஜ், எஸ்.வி.சேகர், ராதாரவி, விவேக், டெல்லி கணேஷ் போன்ற ஜாம்பவான்களையும் பாலசந்தர் தான் அறிமுகம் செய்தார்.