மனைவி, குழந்தையை பிரிந்துவிட்டதாக இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மிஷ்கின், "நான் மனைவியை பிரிவதற்கு முக்கிய காரணம் சினிமா தான். நான் என் மனைவியிடம் ஒருமுறை விவாகரத்து செய்து கொள்ளலாமா? என்று கேட்டேன், அதற்கு அவர்கள் நான் கொடுக்க முடியாது என்று சொல்லி அழுதார். அதிலிருந்து, நான் விவாகரத்தை கேட்கவில்லை. அதனால் நாங்கள் இரண்டு பேரும் தள்ளி நின்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.