திண்டுக்கல்: போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த செட்டிநாயக்கன்பட்டி நந்தனார்புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (25) என்பவரை தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் தாலுகா சரக காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், நீதிமன்ற தலைமை காவலர் நவநீதா மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி சீரிய முயற்சியால் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி பாண்டியராஜன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 60 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.