வேடசந்தூர் ஆத்து மேட்டில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முற்றி தகராக மாறி கைகலப்பானது. இதில் வேடசந்தூரைச் சேர்ந்த பொன் ராஜா என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காலனம்பட்டியைச் சேர்ந்த சண்முகவேல் அவரது தம்பி கார்த்தி கருப்பு தேவன் ஊரைச் சேர்ந்த ராஜா ஆகிய மூவரையும் குத்தினார். இதில் காயம் அடைந்த மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி பொன் ராஜாவை கைது செய்து வழக்குப்பதிந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.