வேடசந்தூர்: பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் புது ரோட்டில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பசும்பால் மற்றும் எருமை பாலுக்கு ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத்தொகை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்றும், ஆவின் கலப்பு தீவனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு தீர்ப்புப்படி ஆரம்ப சங்கங்களில் இருந்து பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக அளவையும் தரத்தையும் குறித்து கொடுக்க வேண்டும் என்றும், கரவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய குழு உறுப்பினர் முத்துச்சாமி தலைமை வகித்தார். விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் பெரியசாமி சிறப்புரையாற்றினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் பொன்மதி, மற்றும் பாரதி, நல்லுசாமி, கிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய குழு உறுப்பினர் சிக்கனன் ராஜு பழனிச்சாமி, ஆட்டோ சங்க நிர்வாகிகள், கட்டுமான சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி