வேடசந்தூர்: குடகனாற்றுக்குள் கொட்டப்படும் குப்பைகள்

65பார்த்தது
வேடசந்தூர் ஒன்றியம் தட்டாரப்பட்டி ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் அனைத்தையும் வாகனத்தில் கொண்டு வந்து குடகனாற்றுக்குள் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசி அப்பகுதியில் குடியிருப்பவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கொட்டப்படும் குப்பைகள் மழை பெய்யும் பொழுது ஆற்று நீரில் கலந்து குடகனாறு அணைக்குச் செல்கின்றது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை ஆற்றில் கொட்டுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி