திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்து பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 27. வேடசந்தூர் அருகே உள்ள நூற்பாலையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரும் நவாமரத்து பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் நவீன்குமார் 21 என்பவரும் காரில் ஒட்டன்சத்திரம் சென்று விட்டு மீண்டும் நவாமரத்து பட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை மணிகண்டன் ஓட்டி வந்தார். கார் எல்லைமேடு பகுதியில் வந்த பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி சாய்ந்து விட்டு அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த இருவரும் காயம் அடைந்தனர். இருவரையும் மீட்ட உறவினர்கள் ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.