வேடசந்தூர்: வெடி வெடித்ததில் கார் தீ பற்றி எரிந்தது

78பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் தாலுகா, எரியோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒரு முக்கிய பிரமுகரின் வீட்டு காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் சீர் கொண்டு வந்த ஊர்வலம் வரும் பொழுது கிரேன் மூலம் பெரிய மாலை கொண்டுவரப்பட்டது. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இதில் மண்டபத்தின் அருகே நிறுத்தி இருந்த ஒரு காரில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தீ பற்றியது. கார் மள மளவென தீ பற்றி எரிந்தது. அங்கிருந்தவர்கள் பைப்பின் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி