திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டம் கோட்டா நத்தத்தில் கிராம மக்கள் பட்டா நிலத்தை கிரயம் கொடுத்து வாங்கி அரசிடம் பட்டா பெற்று குடியிருந்து வருகிறார்கள். ஊர் பொதுமக்கள் பால்ராஜ் குடும்பாத்தாரிடம் இந்த ஆக்கரமிப்பு தவறான செயல் பொதுமக்கள் பணம் கொடுத்து வாங்கிய நிலம் எனவே ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாம் என்று பல முறை நேரில் கூறியும் அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை. இதன் காரணமாக அருகில் குடியிருப்பவர்களிடமும் ஊர் பொதுமக்களிடமும் அடிக்கடி தகறாறில் ஈடுபட்டு வருகிறார்கள் குறிப்பாக தர்மலிங்கம். அருக்காணி குடும்பத்தாரிடம் தகறாறு செய்து பொய் புகார் கொடுத்து வழக்கு பதியப்பட்டு தர்மலிங்கம் குடும்பத்தாரை சிறைக்கு அனுப்பி விட்டனர். இதே போல் சுந்தர்ராஜ், முருகாயி, ஈஸ்வரமூர்த்தி, சுரேந்தர், சக்திவேல், பாலகிருஷ்ணன். சின்னக்காளை (எ) பெரியசாமி மற்றும் பலரோடும் பலமுறை தகறாறு செய்து உள்ளனர். பால்ராஜ் குடுத்தார்கள் புகார் கொடுத்தால் உடனடி விசாரணை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஏன் என்றால் பால்ராஜ் மகன் ராமச்சந்திரன் காவல் துறையில் பணி புரிந்து வருகிறார். ஊரில் நிம்மதியாக வாழ முடியவில்லை ஆகவே எங்களது ரேஷன் கார்டு ஆதார் கார்டு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.